23 December, 2008

தங்கத்தைத் தேடி - மண்ணைத் தேடியல்ல

உங்களுக்காக வரலாற்றிலிருந்து ஒரு சிறு நிகழ்வு...

ஸ்காட் நாட்டு சிறுவனாக அமெரிக்கா வந்த ஆண்டுரூவ் கார்னெகி முதலில் மிக மிகச் சாதாரண வேலைகளைச் செய்யத் தொடங்கினார். இறுதியில், அவர் அமெரிக்காவின் மாபெரும் இரும்புத் தயாரிப்பாளர்களில் ஒருவராக ஆனார்.

ஒரு சமயத்தில் அவரிடம் 43 மில்லியனர்கள் ஒன்றாக சேர்ந்து வேலை செய்து வந்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு மில்லியன்கள் என்பது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். இன்றும் கூட இது மிகப்பெரிய எண்ணிக்கைதான். ஒரு சமயம் ஒருவர் திரு. கார்னெகியிடம், ''நீங்கள் எப்படி ஆட்களை திறமையாக கையாள்கிறீர்கள்?' என்று கேட்டார். ''ஆட்களை கையாள்வது என்பது தங்கத்தை வெட்டி எடுப்பது போன்றது ஆகும். ஒரு அவுன்ஸ் தங்கத்தை பெற டன்டன்னாக மண்ணைஅகற்ற வேண்டும். ஆனால் தோண்ட ஆரம்பித்துவிட்டால், நீங்கள் மண்ணை எதிர்பார்த்து தோண்டமாட்டீர்கள் மாறாக, தங்கத்தை எதிர்பார்த்தே தோண்டுவீர்கள்'' என்று அவருக்கு ஆண்டுரூவ் கார்னெகி பதிலளித்தார்.

நாமும் கூட பலரோடு பழகுகிறோம் - நாம் அவர்களிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டோம்? நன்மைகளை நாடி பிறரோடு பழகுவோம். பிறரிடம் நாம் தவறுகளை கண்டுபிடிக்க முயற்ச்சி செய்தோமென்று சொன்னால் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கலாம். இப்போது நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? ஒரு அவுன்ஸ் தங்கமா? அல்லது டன்டன்னாக மண்ணா? நிச்சயம் உங்களுடைய மனப்பாங்கு தான், உங்களை வெற்றியாளராக்கும்.